Wednesday, Apr 30, 2025

பலருடன் தகாத உறவு; பெண் அதிகாரி கோர முடிவு - கணவர் பகீர் தகவல்!

Attempted Murder Crime Kallakurichi
By Sumathi 8 months ago
Report

மனைவியை கொலை செய்து வீட்டிற்குள் வைத்திருந்தத கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலருடன் நெருக்கம் 

கள்ளக்குறிச்சி, புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி. திருமணமாகி விவாகரத்தான இவர், தன்னுடைய மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ரமணி - அசோக் குமார்

தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இன்சூரன்ஸ் பிரிவு மேலாளராகப் பணியாற்றிய இவர், அடிக்கடி ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசோக் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ரமணிக்கு அவரது தாய் போன் செய்துள்ளார். மருமகன் அசோக் குமாருக்கு போன் செய்துள்ளார். இருவரும் போன் எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்ததில், அங்கு சடலமாக கிடந்த ரமணியைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

தகாத உறவு - கர்ப்பிணி மனைவியை ஆடையில்லாமல் தெருவில் இழுத்துச் சென்ற கணவன்!

தகாத உறவு - கர்ப்பிணி மனைவியை ஆடையில்லாமல் தெருவில் இழுத்துச் சென்ற கணவன்!

கணவன் கொடூரச்செயல்

உடனே, தகவலறிந்த போலீஸார் சடலத்தை மீட்டு தலைமறைவாக இருந்த அசோக் குமாரை வளைத்தனர். அதன்பின் மேற்கொண்ட விசாரணையில், உளுந்தூர்பேட்டையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த நான், வாரத்தில் ஒருநாள் கிருஷ்ணாபுரம் சென்று ரமணியையும் குழந்தைகளையும் பார்த்துவிட்டு வருவேன்.

kallakurichi

அப்போது ரமணி வேறு சில ஆண்களுடன் பழகுவது எனக்கு தெரிய வந்தது. போலீஸ் ஏட்டு ஒருவருடனும் நெருக்கமாக பழகி வந்தார். செல்லும் இடத்திலெல்லாம் ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பேசுவது, குறித்து ரமணியிடம் கேட்டேன். அதனால் எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆண் நட்புகளுக்கு இடையூறாக இருக்கும் கணவன்களை, ஆண் நண்பர்களை வைத்தே மனைவிகள் கொலைசெய்யும் செய்திகளை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அப்படி ரமணி என்னை கொலை செய்து விடுவாளோ என்று பயந்தேன். அவளுக்கு முன்பு நான் முந்திக் கொண்டேன்.

லெஸ்சியில் தூக்க மாத்திரையை கலந்து எடுத்துக் கொண்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்றேன். சமாதானப்படுத்தி அதை குடிக்க வைத்தேன். அவள் தூங்கியதும் தலையனையை முகத்தில் அழுத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.