40 ஆண்டுகள் போராட்டத்தில் 2019-ஆம் ஆண்டு உருவான கள்ளக்குறிச்சி பற்றி தெரியுமா?

Tamil nadu Kallakurichi
By Karthick Aug 30, 2023 08:52 AM GMT
Report

40 ஆண்டுகள் போராட்டத்தில் 2019-ஆம் ஆண்டு உருவான கள்ளக்குறிச்சி பற்றி தெரியுமா?

கள்ளக்குறிச்சி

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றான கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக கள்ளக்குறிச்சி ஆகும். தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 562 வருவாய் கிராமங்களும் கொண்டிருக்கிறது.

தனி மாவட்ட கோரிக்கை

40 ஆண்டுகளுக்கு மேலாக திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என தொடர்நது அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

kallakurichi-history-in-tamil

இந்நிலையில் தான், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணி, போளூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யார், வெம்பாக்கம், சமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி ஆரணி தலைமையில் விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

மாவட்டத்தின் பொருளாதாரம் 

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாலும் வேளாண்மை தொழிலுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது. இம்மாவட்டத்தில் மணிமுக்தா, கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடையும் காரணத்தால், இம்மாவட்டத்தில் அதிகளவில் நெல், கரும்பு அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

kallakurichi-history-in-tamil

நெல், கரும்பு அதிகமாக விளையும் காரணத்தால், இந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளும், மூன்று சர்க்கரை ஆலைகளும் இருக்கின்றன. நெல், கரும்பை தொடர்ந்து பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, மஞ்சள், கம்பு போன்ற பொருள்களும் பயிரிடுகின்றனர்.

கல்வராயன் மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்ச்சியாக மிகவும் பிரபலமான கல்வராயன் மலைகள் சேலம் மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. இதில், சேலம் மாவட்டத்திலுள்ள எல்லைகளை கல்ராயன்மலை என்றும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எல்லைகளை கல்வராயன்மலை என்றும் அழைக்கின்றனர்.

kallakurichi-history-in-tamil

கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்வராயன்' மற்றும் தென்பகுதி 'பெரிய கல்வராயன்' என்று குறிப்பிடப்படுகின்றது. 'சின்னக் கல்வராயன்' மலைகள் சராசரியாக 2,700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4,000 அடி உயரமும் கொண்டவை. பச்சைமலை, சேர்வராயன் மலைகள், ஜவ்வாது மலைகள் ஆகியவற்றுடன் இம்மலை காவிரி ஆற்றின் வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன குறிப்பிடத்தக்கது.

சேந்தமங்கலம் ஆபத்சகாயீஸ்வரர் கோயில்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சேந்தமங்கலம் என்ற ஊரில் சேந்தமங்கலம் ஆபத்சகாயீஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கோவில் நிறுவப்பட்டதாக நம்பப்படும் நிலையில், இன்றளவும் சிவன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான இடமாக திகழ்கிறது.

kallakurichi-history-in-tamil

இந்த கோயிலில் ஆபத்சகாயீஸ்வரர், சிவலோகநாயகி சன்னதிகள் உள்ளன.இக்கோயிலில் நடைபெறும் ஒருகாலப் பூஜையும் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் அன்று முக்கிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். முதன்மைத் திருக்கோயில் என்ற பிரிவின் கீழ் இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் ஜிநாலயம்  

திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊரான திருநறுங்கொன்றை என்ற ஊரில் அப்பாண்டைநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருநருங்கொண்டை, தற்பொழுது திருநறுங்குன்றம் என அழைக்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்காக 16 கி.மீ அல்லது திருக்கோவிலூரிலிருந்து 21 கி.மீ தென்கிழக்காகவும் அமைந்துள்ளது.

kallakurichi-history-in-tamil

இக்கோயில் சமண மதத்தின் இருபத்து மூன்றாவது தீர்தரங்கரான பார்சுவநாதருக்கு அமைக்கப்பட்டது ஆகும்.மேலும் இந்த மலையில் உள்ள குகையில் 12 சமணப் படுகைகளும் உள்ளன.இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.  

கோயில் அமைவிடம்

திருநறுங்குன்றத்துக்கு அருகே வடபுறம் அறுபது அடி உயரமுடைய சிறு குன்று ஒன்று உள்ளது. கீழே சனிபகவான் சன்னதி உள்ளது. கிழக்குப் பாறையில் கீழே அப்பாண்டநாதர் சிலை உள்ளது. பண்டைய கால கல்வெட்டுகளில் இம்மண்டபம் மேலைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.

மேலும் இக்கோயிலில் பகவான் சந்திரநாதர், பத்மாவதி அம்மன் சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்கு குணபத்திர முனிவர் என்பவர் ‘வீர சங்கம்’ நிறுவி கல்வித் தொண்டு செய்துள்ளார். அப்பரும் சம்பந்தரும், இவரையும் வீரசங்கத்தையும் போற்றிப் பாடி உள்ளனர்.