போலீசை மிரட்டியே கொன்ற பெண் பேய் - அதிர்ச்சி சம்பவம்: என்ன நடந்தது?

kallakurichi police suicide death ghost fear
By Anupriyamkumaresan Nov 17, 2021 10:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கள்ளக்குறிச்சியில் பெண் பேய் ஒன்று மிரட்டி வந்ததால் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் கடலூர் ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், விஷ்ணுபிரியா என்பவருக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளது. பிரபாகரன் தனது குடும்பத்துடன் கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தன் குடும்பத்துடன் சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது பிரபாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரபாகரன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிய வந்திருக்கிறது. மேலும் காவலர் குடியிருப்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு இறந்துபோன பெண் பேயாக வந்து தன்னை மிரட்டி வருவதாக கூறி வந்திருக்கிறார்.

போலீசை மிரட்டியே கொன்ற பெண் பேய் - அதிர்ச்சி சம்பவம்: என்ன நடந்தது? | Kallakurichi Ghost Fear Police Suicide Death

தனக்கு பேய் பிடித்திருக்கலாம் என்று நினைத்தவர், குறிசொல்பவர்களை பார்த்து மந்திரித்து வந்துள்ளார். இதனால் 15 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே பூஜை அறையிலேயே இருந்திருக்கிறார். விடுமுறை முடிந்ததும் பணிக்குத் திரும்பிய பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .

பிரபாகரன் வேலையில் இருந்தபோது சிரித்த முகத்துடன் இருப்பதோடு அல்லாமல் உயரதிகாரிகளின் நன்மதிப்பையும் பெற்றிருந்திருக்கிறார். அதனால் அவரது இறப்பிற்கு பணிச்சுமை காரணமல்ல என்பது தெரியவந்திருக்கிறது.

பேய் பயம் காரணம் தான் அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பேய் பயத்தினால் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட போலீசார் சம்பவம் கடலூர், கள்ளக்குறிச்சி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.