கள்ளக்குறிச்சி - முதல் ஆளாக நின்று தனது ஜனநாயக கடமையாற்றினார் மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் முதல் ஆளாக நின்று தனது ஜனநாயக கடமையாற்றினார் மாவட்ட ஆட்சியர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளில் மொத்தமாக 141 பதவிகளுக்கு தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதும் 83481 ஆண் வாக்காளர்களும்,88322 பெண் வாக்காளர்களும்,38 மூன்று பாலினத்தவரும் என மொத்தமாக 1,71,841 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 2-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சயாவடி மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் ஆய்வு மேற்கொண்டு
தொடர்ந்து 2-வது வார்டு வாக்குச்சாவடியில் முதல் ஆளாக நின்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பொதுமக்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.