கள்ளக்குறிச்சி கலவரம் : பள்ளி நிர்வாகிகளுக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ல் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த நிலையில் கலவரத்தில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கலவரம்
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 32 வகையான வதந்தி செய்திகள் பரப்பப்பட்டது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை வலைத்தள பக்கங்கள் வதந்தி செய்தியைப் பரப்பியுள்ளன என்பது குறித்து கணக்கெடுத்த பிறகு, அந்த பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஐந்து பேருக்கு காவல்
அதே சமயம் ,கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கும் ஒருநாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது,பள்ளி தாளாளர் உட்பட 5 பேரையும் ஒருநாள் மட்டும் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், ஒரு நாள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, அதன்படி இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை 5 பேருக்கும் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது