ஸ்ரீமதி உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு... உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
கலவரமான கள்ளக்குறிச்சி
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு பேரில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது . அதன்படி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க இருந்த நிலையில் பெற்றோர் மாணவி உடலை வாங்க மறுத்தனர்.
மறு பிரோத பரிசோதனை
இதனிடையே மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது குடும்ப அவரது வீட்டில் நோட்டீசும் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மீண்டும் நடத்தபட்ட மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரி பார்த்துக் கொள்ளலாம் என்று கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் , நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவி உடலை பெற்றுக் கொள்வதில் ஏன்? தாமதம் ஒவ்வொரு முறையும் பிரச்சனையை ஏற்படுத்துகிறீர்கள். அமைதியாக தீர்வு காண வேண்டும்.
நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா ? என்று கேள்வி எழுப்பினார் ,அத்துடன் மாணவியின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள்? அதே சமயம் ,பெற்றோர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது.கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுகின்றனர் என கூறினார்.
இந்த நிலையில் மரணமடைந்த மாணவி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.| மாணவியின் உடலை நாளை காலை 6 மணிக்கு பெற்றுக்கொள்ள உள்ளதாகசென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் தரப்பு தெரிவித்துள்ள நிலையில் மருத்துவமனையிலிருந்து நாளை காலை உடலை பெற்றுக் கொண்டு, மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாணவியின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.