கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சுவலி

By Irumporai Jul 17, 2022 11:23 AM GMT
Report

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியது.

வாகனங்களுக்கு தீ

இந்த கலவரத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலதுறையினர் சிலர் காயமடைந்தனர். மேலும் , போரட்டக்காரர்கள் சிலர் காவல் துறையின் வகனங்களை தாக்கினர், அதே சமயம் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சுவலி | Kallakurichi Chinnasalem Student Suicide Issue

பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த நிலையில் போரட்டம் களவறமாக மாறியது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

வாட்ஸ் அப் மூலம் வந்த கூட்டம்

கள்ளக்குறிச்சி வன்முறை - வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டதாக கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சுவலி | Kallakurichi Chinnasalem Student Suicide Issue

பெற்றோருக்கு நெஞ்சுவலி

கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் ஆய்வு மேற்க்கொண்டார்.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சுவலி | Kallakurichi Chinnasalem Student Suicide Issue

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் மாணவியின் தந்தை ராமலிங்கம் - தாய் செல்விக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.