விஸ்வரூபம் எடுக்கும் மாணவி மரணம்.. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் : காவலர்கள் தடியடி
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அப்பள்ளியின் உரிமையாளரை கைது செய்யக் கோரியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மர்ம கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி விடுதியில் தங்கி கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி படித்து வந்தார்.
நேற்று முன் தினம் அதிகாலை விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியின் மர்ம மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என கூறி வருகின்றனர்.
நீதி கேட்டு போராட்டம்
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுவில் மாணவி இறப்பிற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்தன மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என தகவல் வந்தது.
இதனையடுத்து மாணவியின் இறப்புக்கு நியாயம் கேட்டு கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனை முன்பு மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது போலீசார் உடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஏற்பட்டதால் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் நான்கு முனை சாலையில் மறியல் செய்வதற்காக சென்றனர் மறியலில் ஈடுபட முயன்ற உறவினர்களை போலீசார் அப்போது அவர்களை தடுக்க முயன்றனர்.
சாலை மறியல்
ஆனாலும் போலீசாரின் தடுப்புகளை தாண்டி முன்னோக்கிச் சென்ற பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பேருந்து நிலையம் அருகே நான்கு முனை சந்திப்பில் இன்றும் சாலையில் அமர்ந்தபடி அப்பள்ளியின் உரிமையாளரை கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் ஈடுபட்டனர்.
அப்பொழுது சேலம் செல்லும் சாலை கச்சராபாளையம் செல்லும் சாலை சங்கராபுரம் செல்லும் சாலை சென்னை செல்லும் சாலைகளில் வாகனங்கள் செல்லாதவாறு நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்
இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு சாலை மறியலின் போது எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவியின் இறப்பு நீதிகேட்டு பலரும் மாணவியின் பெயரோடு சேர்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.