அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: பதட்டத்தில் கள்ளக்குறிச்சி!
கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ வைத்த நபரை கைது செய்யக்கோரி பலர் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தந்தை பெரியார் சிலைகளுக்கு தீ வைப்பது, அவமதிப்பது, காவி சாயம் பூசுவது உள்ளிட்ட செயல்களில் மர்ம நபர்கள் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென அண்ணா சிலைக்கு அதே போன்ற அவமதிப்பு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பல ஆண்டுகளாக இருந்துவரும் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததாக தகவல் வெளியானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணா சிலைக்கு தீ வைத்த தகவல் தெரிந்ததும் அங்கு கூடிய பொதுமக்கள், தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் திரண்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
இது குறித்த தகவல் அறிந்த உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அண்ணா சிலைக்கு தீ வைத்தமைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கண்டணத்தை தெரிவித்து வருகின்றனர் .