துண்டு துண்டாக வீடியோ வெளியாவது ஏன்? ஸ்ரீமதி தாயார் கேள்வி
மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் புதிய சிசிடிவி காட்சிகளுக்கு மாணவியின் தாய் சந்தேகம் எழுப்பி இருக்கிறார் .
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் பெரும் கலவரத்தில் முடிந்தது, இந்த நிலையில் மாணவியின் இறப்பு கடந்த 17ஆம் தேதி அன்று பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.
இதனால் பள்ளி வாகனங்கள் போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. பள்ளியில் உள்ள ஆவணங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது குறித்த வழக்குகளை சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
விசாரணையின் போது வெளியிடப்படாமல் வைத்திருந்த ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்து இருப்பது , மாடிக்கு செல்லும் காட்சிகள் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வந்தன.
இந்த நிலையில் ஸ்ரீமதி மரணம் தொடருமாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது. விடுதி தரை தளத்தில் இருந்து மாணவியை மூன்று பெண்கள் ஒரு ஆண் ஆகிய நான்கு பேர் தூக்கிச் செல்வது போல் அதில் பதிவாகி இருந்தது.
இந்த புதிய வீடியோ காட்சி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து ஸ்ரீமதியின் தாயார் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த சிசிடிவி காட்சிகளை இன்று வெளியிடுவோர் ஜூலை 13ஆம் தேதி கண் காட்டி இருக்கலாம் எங்களிடம் 13ஆம் தேதி மூணு முப்பது மணிக்கு ஒரு நிமிட சிசிடிவி காட்சியை மட்டுமே காண்பித்தார்கள் .
அதில் என் மகளை தூக்கிச் செல்வது போல எதுவுமே இல்லை. சிசிடிவி காட்சிகளை யார் முறியடிகிறார்கள் என்றும் தெரியவில்லை. இப்போது வெளியாகி இருக்கின்ற காட்சிகள் அப்பட்டமான பொய்யான பொய்.
என் மகள் கீழே விழும் காட்சிகளுடன் வீடியோ வெளியிட்டு இருந்தால் சந்தேகம் திறந்திருக்கும். ஆனால் அதனை மறைத்து இப்படி துண்டு துண்டாக வீடியோவை வெளியிடுவது வருகிறார்கள் அதனால் தான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என்கிறார்.