காலிங்கராயன் கால்வாயில் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன? - அதிர்ச்சி ரிப்போர்ட்
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் கால்வாயில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் முழுமையாக வடிந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனையடுத்து, ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்புகளின் கழிவுநீர் மட்டும் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் கழிவுநீரில் உயிர் வாழ முடியாமல், வாய்க்காலில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன.

இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றத்தால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குடியிருப்புகளின் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.