தலைநிமிர்ந்து வருகிறேன், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் - மு.க.ஸ்டாலின்..!
தேர்தல் வெற்றியின் மூலம் தங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன் என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனாவுக்கு எதிராக திமுக அரசு போராடி வருகிறது என்றும், கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு தொடர்ந்து போராடி வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தலைநிமிர்ந்து வருகிறேன்! #KalaignarForever https://t.co/4HzvtEGo5u
— M.K.Stalin (@mkstalin) June 3, 2021
மேலும், கம்பீரமாக வருகிறேன், தலைநிமிர்ந்து வருகிறேன். தேர்தல் வெற்றியின் மூலம் தங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.