தந்தை கருணாநிதியின் சொந்த வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திருவாரூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அஞ்சுகத்தம்மையார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் திருவாரூரில் உள்ள தந்தை கருணாநிதி இல்லத்திற்கு சென்றுள்ளார்.
கருணாநிதி இல்லத்திற்கு சென்ற பின்னர் இன்று காலை காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பச்சிளங்குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான தனி கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து திருவாரூரில் உள்ள கட்சி நிர்வாகிகளை முதல்வர் சந்திக்கவுள்ளார்.