அதிமுகவில் காளியம்மாளுக்கு சீட் கிடைக்குமா?

ADMK
By Fathima Mar 16, 2026 08:41 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்து கொண்ட காளியம்மாள் நாகை தொகுதியில் போட்டியிட விருப்பம்.

நாம் தமிழர் கட்சியில் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தவர் காளியம்மாள், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், காளியம்மாளுக்கும் கருத்து மோதல் ஏற்பட அக்கட்சியிலிருந்து விலகினார்.

தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என கூறப்பட்ட நிலையில், அக்கட்சியிலிருந்து யாரும் ஆர்வம் காட்டவில்லை.

அதிமுகவில் காளியம்மாளுக்கு சீட் கிடைக்குமா? | Kaliammal Joined Aiadmk

இந்நிலையில் அதிமுக வில் இணைந்து கொண்டார், மேலும் நாகை தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக கட்சியின் மேலிடத்தில் கூறியதாக தெரிகிறது.

அத்தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட கதிரவன், ஆளுர் ஷாநவாஸிடம் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

அதனால் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே அத்தொகுதியை ஒதுக்க இயலாது என கட்சித்தலைமை கூறிவிட்டதாம், இதற்கு பதிலாக கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் காளியம்மாளுக்கு சீட் கிடைக்குமா? | Kaliammal Joined Aiadmk