கலாஷேத்ரா பாலியல் புகார் - மாணவிகளிடமும் சகஜமாகதான் பழகினேன் ஹரி பத்மன் பரபரப்பு வாக்குமூலம்
அனைத்து மாணவிகளிடமும் சகஜமாக பழகியதாக பாலியல் புகாரில் சிக்கிய கலாஷேத்ரா ஆசிரியர் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
காலாஷேத்ரா விவகாரம்
சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன் , மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து தனிப்படை அமைத்து, ஹரி பத்மனை ஹைதிராபாத்தில் இருந்து சென்னை வந்த அவரை அவரது நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சகஜமாக பழகினேன்
இந்த நிலையில் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட ஹரி பத்மன் காவல்துறையினரிடம் கூறிய முதற்கட்ட விசாரணை தகவல் வெளியாகியுள்ளது.
அதில், புகார் கூறிய அனைத்து மாணவிகளிடமும், சகஜமாக பழகியதை தவறாக சித்தரித்து கூறுகின்றனர், புகார் அளித்த முன்னாள் மாணவி வேறு காரணங்களுக்காக வெளியேறியதாகவும் அவரது குற்றச்சாட்டு உண்மையல்ல எனவும் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.