கலாஷேத்ரா விவகாரம் 3 ஆசிரியர்களை அனுமதிக்க கூடாது : ஆணைய தலைவர்
மாணவிகள்புகார்கொடுத்த மூவரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்ககூடாது என ஆணைய தலைவர் குமாரி கூறியுள்ளார்.
சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைகழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன், மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த பதமனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இயக்குனர் ஆஜர்
இந்த நிலையில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மாநில மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜரானார் ஆவரிடம் மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரனை நடத்தி வருகின்றார்.
அனுமதிக்க கூடாது
விசாரணை முடிந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி : மாணவிகள் புகார் அளித்த மூன்று பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்க கூடாது என இயக்குனரிடம் கூறியுள்ளேன். கலாஷேத்ரா தொடர்பாக மேலும் சில ஆவணங்களை இயக்குனர் ரேவதியிடம் கேட்டுள்ளேன். மாணவிகளின் புகார் மீது கலாஷேத்ரா எடுத்த நடவடிக்கைகள் பற்றி இயக்குனரிடம் கேட்டறிந்தேன்.
போராட்டத்தில் மீண்டும் ஈடுபட உள்ள மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். கல்லூரியின் ஐசிசி கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து ஆவணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.