கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - சில்மிஷம் செய்த பேராசிரியர்
கலாஷேத்ரா அறக்கட்டளையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ருக்மிணி தேவி கவின் கலைக் கல்லுாரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.
இங்கு பயின்றுவரும் மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது.
பின்னர் கல்லுாரியில் திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாலியல் துன்புறுத்தல் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை அளித்திருந்தது.
பேராசிரியர் மீது வழக்குப்பதிவு
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாக கூறி கல்லுாரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லுாரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கலாஷேத்ரா மாணவர்கள் அறிவித்துள்ளனர்.