அன்புச்செழியன், கலைப்புலி தாணு தொடர்ந்து முக்கிய தயாரிப்பாளர்கள் அலுவலகத்தில் ரெய்டு!
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருவது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரி சோதனை
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களுள் ஒருவர் கலைப்புலி ஸ்.தாணு. இவர் கலைப்புலி பிலிம் இன்டெர்னஷனல்ஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
மகளிர் மட்டும் என்னும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர் தற்போது பல முன்னணி நடிகர்களை கொண்டு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படங்களை தயாரித்து வருகிறார்.
கலைப்புலி எஸ்.தாணு
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரிழும் , வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக வருமான வரி துறையினர் தற்போது திநகர்,பிரகாசம் சாலையில் உள்ள கலைப்புலி பிலிம் லிமிடெட் அலுவலகத்தில் சோதனையானது காலை 9 மணி முதல் நடை பெற்று வருகிறது.
இந்த சோதனையில் சுமார் 12 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய புள்ளி
மேலும், இவர்கள் இருவரின் அலுவலகம் மட்டுமின்றி, எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியார், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் ஆகிய அலுவலங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
இன்னும் சில பைனான்சியர்ஸ் மற்றும் தயாரிப்பாளர்கள் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.