விரைவில் சொந்த ஓடிடி தளத்தைத் துவங்கும் கலைஞர் தொலைக்காட்சி!

Kalaignar TV soon start Over-the-top media
By Anupriyamkumaresan Oct 03, 2021 02:27 PM GMT
Report

கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் விரைவில் தங்களது சொந்த ஓடிடி தளத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது உலகளவில் பிரபலமான ஓடிடி தளங்கள் இந்தியாவிலும் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இந்த கொரோனா காலம் ஓடிடி தளங்களுக்கு பொற்காலமாக அமைந்துவிட்டது.

தற்போது வெளியாகும் படங்களில் பாதி படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. நாளுக்கு நாள் ஓடிடி தளங்களின் மவுசு அதிகரித்துக்கொண்டே போகிறது.

விரைவில் சொந்த ஓடிடி தளத்தைத் துவங்கும் கலைஞர் தொலைக்காட்சி! | Kalaignar Tv Soon Start Ott Own

இந்நிலையில் தொலைக்காட்சி நிறுவனங்கள் பலரும் தங்களுக்கு என்று சொந்த ஓடிடி தளங்களை வைத்துள்ளனர். சன் தொலைக்காட்சி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தையும், ஜீ தமிழ் தொலைக்காட்சி Zee5 ஓடிடி தளத்தையும், விஜய் தொலைக்காட்சி ஹாட் ஸ்டார் என்ற ஓடிடி தளத்தையும் வைத்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சி நிறுவனமும் தங்களுக்கென்று தனி ஓடிடி தளத்தை விரைவில் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.