கலைஞரிடம் 2 ஏக்கர் நிலம் கேட்டதுக்கு கைகொடுத்து சென்றார் - ஓ.பி.எஸ் மதுரையில் பிரச்சாரம்
மதுரை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா மற்றும் மேலூர் சட்டமன்ற வேட்பாளர் பெரியபுல்லான் என்கின்ற செல்வம் ஆகிய இருவரையும் ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடம் பேசுகையில், “தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டிருக்கிறது, திமுக ஆண்டிருக்கிறது. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அம்மா ஜெயலலிதா ஆகியோர் தான் மக்களுக்கு தேவையான சத்துணவு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தனர். சமூக பாதுகாப்பு திட்டத்தை அம்மா தொடங்கிவைத்தார், தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தியவர் அம்மா.
திமுக ஆட்சியில் எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு 6.5லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. மேலும் 19.5 லட்சம் காங்கிரிட் வீடுகள் கட்டி தரப்படும்.

பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி, தாலிக்கு தங்கம் வழங்கியவர் அம்மா. 4 கிராம் தங்கத்தை 8 கிரமாக வழங்கிய அரசு. பெண்களின் பணிச்சுமையை குறைக்க மிக்ஸி, கிரைன்டர் வழங்கியவர் அம்மா. சட்டசபையில் கலைஞரிடம் 2 ஏக்கர் நிலம் கேட்டதுக்கு கைகொடுத்து சென்றார். திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு, அதிமுக அறிக்கை செல்லும் நோட்டு. முதியோர் உதவி தொகையை ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும்.
பெண்கள் துணி துவைப்பதற்கு எதுவாக விலையில்லாத வாஷிங் மிசின் வழங்க இருக்கிறோம். ஆணுக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் சமத்துவத்தை உணர்த்தும் விதமாக இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு , தொழிற்சாலைகள் அமைத்து தர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விட கடந்த 10 ஆண்டுகளில் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். எஜமானர்கள், நீதிபதிகளாக இருக்கும் நீங்கள் நல்ல ஆட்சியை பார்த்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பளபளவென்று புதிய ஆட்டோ வாங்குவதற்கு 25000 ரூபாய் மானியம் வழங்கப்படும். பெண்களுக்கு திருமண உதவி தொகை 25 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரம் ரூபாயாகவும் 4 கிராம் தங்கத்தில் இருந்து எட்டு கிராம் தங்கம் ஆக்கும் முயற்சியில் இறங்கிய இந்த அரசு தொடர வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு” என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.
மேலும் பிரச்சாரத்திற்கு வந்த இளைஞர்கள் 2 ஜிபி நெட் வழங்கியது போல், மாணவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்க கோரிக்கை விடுத்தனர்.