சொந்த வீடு கட்டணுமா? அரசு வழங்கும் லட்சங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

Tamil nadu DMK
By Sumathi Dec 26, 2024 04:40 AM GMT
Report

கலைஞர் கனவு இல்லம் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.

கலைஞர் கனவு இல்லம்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தமிழ்நாட்டிற்கான 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

kalaignar kanavu illam

அதன்படி, ரூ.400 கோடி விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இப்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3,50,000. இந்த தொகைக்கு ஏற்ப கட்டுமான பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் கட்டுமான பணிகளும் செய்யப்படுகிறது. மேலும், தங்களது வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினால் ரூ.1.50 லட்சம் வரை கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.

மாதவிடாய் என்று கூறியும் விடாத கும்பல்; அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - பகீர் தகவல்

மாதவிடாய் என்று கூறியும் விடாத கும்பல்; அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - பகீர் தகவல்

தகுதி என்ன?

வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும். சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

சொந்த வீடு கட்டணுமா? அரசு வழங்கும் லட்சங்கள் - எப்படி விண்ணப்பிப்பது? | Kalaignar Kanavu Illam Scheme Application Details

ஏற்கனவே அரசால் கணக்கெடுப்பிலும் மேற்கொள்ளப்பட்டமூன்று வகை விடுபட்ட குடிசையில் வசிப்பவர்கள் இத்திட்டத்தின்கீழ் வீடு வழங்கிடக் கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மூன்று நிலைகளில் ஒற்றை சாளர கணக்கு மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.