ரஜினி முதல் நயன்தாரா வரை - குவியும் நட்சத்திரங்கள் - களைகட்டும் "கலைஞர் 100"
முன்னாள் முதல்வர் கலைஞர் 100’ விழாவில் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கலைஞர் 100
திராவிட கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் 100 நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி நடத்தவிருந்த இந்த நிகழ்ச்சி மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இன்று நடந்து வருகின்றது.
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் "கலைஞர் 100" இன்று மாலை பிரமாண்டமாக துவங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் அநேக நட்சத்திரங்கள் பலருக்கும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர்கள் ரஜினி, கமல் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
பொது நிகழ்ச்சிகளை பெரும்பாலும் தவிர்த்து வந்த முன்னணி நடிகையான நயன்தாரா, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அதே போல தமிழ் முன்னணி நட்சத்திரங்களான தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.