நீ தான் என் Best Friend..நடிகை மீனாவுக்கு கண்ணீர் மல்க சர்ப்ரைஸ் கொடுத்த கலா மாஸ்டர்
நடிகை மீனாவின் பிறந்த நாளை அடுத்து அவரது வீட்டிற்கு சென்ற கலா மாஸ்டர் கண்ணீர் மல்க சர்ப்ரைஸ் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கணவர் மரணம்
நடிகை மீனாவின் பிறந்த நாள் நேற்று செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மீனா கடந்த தீபாவளியன்று வெளியான ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் உள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் மீனா கணவர் உயிரிழந்தார் இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய் வித்யாசாகருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அவரின் மரணம் நடிகை மீனாவை நிலைகுலைய வைத்த நிலையில் தனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மெல்ல மெல்லமாக மீண்டு வருகிறார் மீனா.
சர்ப்ரைஸ் கொடுத்த கலா மாஸ்டர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தனது உடலை தானம் செய்வதாக மீனா அறிவித்தார். இந்த நிலையில் நேற்று நடிகை மீனாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

அப்போது அவரின் வீட்டிற்கு செனற் நெருக்கிய தோழியான கலா மாஸ்டர் மறைந்திருந்தார் அப்போது மீனா வரும் போது அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

மீனா நடித்த எஜமான் படத்தின் பாடல் ஒலிக்க இருவரும் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

அப்போது தனது தோழியை கட்டிப்பிடித்த கலா மாஸ்டர் கண்ணீர் சிந்தினார்.தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan