கமலுக்கு எதிராக களமிறங்கிய கலா மாஸ்டர்

kamal master bjp kala
By Jon Mar 22, 2021 11:14 AM GMT
Report

பிரபல நடன இயக்குநர் கலா தமிழக மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்தார். தினகரனின் நேர்மையான பேச்சு, துணிச்சலான செயல்பாடுகளால் அமமுகவில் இணைத்துள்ளேன் என அப்போது பேசிய கலா மாஸ்டர்.

தற்போது தேர்தல் நெருங்கும் சூழலில் அமமுகவிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அத்துடன் தற்போது கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வானதி சீனிவாசனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் முதல் பிரச்சாரம். மக்களின் வரவேற்பு வெகுவாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்  

நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு அதற்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குஷ்புவை தொடர்ந்து சிவாஜி மூத்த மகன் ராம்குமார், பிரபல நடிகை ராதா, நடிகர் தேவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமாக உள்ளது பாஜக.