பல்கலைக்கழகத்தில் நடந்த “ஃபர்ஸ்ட் நைட்” - அதிர்ச்சியில் மாணவர்கள்

honeymoonsuite jawaharlal Nehru Technological University
By Petchi Avudaiappan Aug 24, 2021 11:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் திருமண ஜோடி ஒன்று முதல் இரவு கொண்டாடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் ஜவர்ஹர்லால் நேரு டெக்னாலஜிக்கல் என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வரும் இங்குள்ள கெஸ்ட் ஹவுஸ்கள்சிறப்பு பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், அல்லது அய்வாளர்கள் தங்குவதற்காக வழங்கப்படுவது வழக்கம்.

இதனை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பல்கலைகழகத்தின் பெண்கள் மேலாண்மை பிரிவின் இயக்குநர் சுவர்ணா குமாரி என்பவர் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த அறை புதுமண தம்பதியினருக்கு முதலிரவு நடத்துவதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் தம்பதியினர் தங்கிய அறை உட்பட 2 அறைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சரியான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளருக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.