வெள்ளையாக மாற பிரபல நடிகை அறுவை சிகிச்சை - இதுதான் காரணம்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
தான் வெள்ளை நிறத்திற்கு மாறியதற்கு நடிகை கஜோல் விளக்கமளித்துள்ளார்.
கஜோல்
பாலிவுட் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஜோல். தமிழில் அரவிந்த் சாமி, பிரபுதேவா நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்னை 3 வருடமாக காதலித்து 1999ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்.
இந்நிலையில், கஜோல் கருப்பாக இருந்ததாகவும், தற்போது சரும அறுவைச் சிகிச்சை செய்து வெள்ளையாக மாறியிருப்பதாக பலர் பேசி வந்தனர். இதற்கு விளக்கமளித்த கஜோல், "நீங்கள் எப்படி வெள்ளை நிறத்துக்கு மாறினீர்கள் என்று என்னை கேட்கிறார்கள். நான் வெள்ளையாக மாறுவதற்காக எந்தவித சர்ஜரியும் செய்து கொள்ளவில்லை.
சர்ஜரி இல்லை
வெயிலில் அதிகமாக சுற்றாமல் ஜாக்கிரதையாக இருக்கிறேன். அதுதான் காரணம். வாழ்க்கையில் பத்து ஆண்டுகள் மிக அதிகமான வெயிலில்தான் படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டி வந்தது. அதன் காரணமாக கருப்பாக காட்சி அளித்தேன்.
இப்போது நான் வெயிலை விட்டு விலகி இருக்கிறேன். அதனால் தான் என் நிறம் மாறி இருக்கிறது. அவ்வளவுதானே தவிர எந்தவித அறுவை சிகிச்சையாலும் அல்ல'' எனத் தெரிவித்துள்ளார்.