காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்
நடிகை காஜல் அகர்வாலின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
காஜல் 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்திலிருந்தும் விலகினார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக தனது பேபி பம்ப் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த அவர் தற்போது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.