வயிற்றில் குழந்தையுடன் காஜல் செய்த சேட்டை - ஷாக் ஆன ரசிகர்கள் வைரலாகும் வீடியோ
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை காஜல் அறிவித்திருந்தார்.இதனிடையே அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்,தெலுங்கு,இந்தியில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் காஜல் அகர்வால். தமிழில் பரத் நடித்த பழனி படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து சரோஜா,பொம்மலாட்டம்,மோதி விளையாட்டு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பை பெறாத நிலையில் அவருக்கான பட வாய்ப்பு தமிழில் குறையத் தொடங்கியது. இதையடுத்து அவர் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
இந்நிலையில் தெலுங்கில் இவர் நடித்த மகதீரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவருக்கான பட வாய்ப்புகள் தமிழிலும் அதிகரிக்க தொடங்கின.
தமிழில் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தின் ஹீரோயினாக நடித்த காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
2020ல் தொழிலதிபர் கௌதம் கிட்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் ஹே சினாமிகா,கருங்காப்பியம்,கோஷ்டி ,இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் காஜர் அகர்வால் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
அவருக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதற்கிடையில் வயிற்றில் குழந்தையுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
பெண் பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி அளிக்க காஜல் அகர்வால் ஒர்க் அவுட் செய்கிறார். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.