வயிற்றில் குழந்தையுடன் டான்ஸ் ஆடிய நடிகை காஜல் அகர்வால் - வைரல் வீடியோ
நிறைமாத கர்ப்பிணியாகவுள்ள நடிகை காஜல் அகர்வால் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பேரரசு இயக்கிய பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து நடிகர்கள் விஜய்,தனுஷ், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சில மாதங்கள் முன்பு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமாக இருப்பதுடன் வெளியானது.
அதன்பின் கடந்த சில வாரங்களாக கர்ப்பிணியான காஜல் அகர்வால் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், விளம்பரங்கள்,வளைகாப்பு, நீச்சல் உடையிலிக்கும் புகைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நிறைமாத வயிற்றுடன் காஜல் அகர்வால் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதில் சில நடன அசைவுகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.