பேசாமல் உங்கள் வேலையை பார்ப்பது நல்லது" - உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வாலின், கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்கு ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்தனர் .இதற்கு பதில் அளித்துள்ள காஜல் அகர்வாளின் பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால், கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு, அக்டோபர் மாதம், பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்துவந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு காஜல் அகர்வால் கர்ப்பமான வயிறு தெரிய மாடர்ன் உடையணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் . அதை பார்த்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை குவித்து வந்தனர்.ஒரு சில நெட்டிசன்கள், வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கிண்டல் அடித்து வந்தனர்.
அதற்கு, பதில் அளிக்கும் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாய்மை என்பது ஒரு வரமாகும். எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் எனது பணி போன்றவற்றை நான் மிகவும் லாவகமாக கையாண்டு வருகிறேன்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் இயற்கையானவை ஆகும். கர்ப்பிணிகள் நம் வாழ்வின் இது போன்ற மிக அழகான, தருணத்தில், நாம் சங்கடமாகவோ அல்லது மன அழுத்தமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தையை சுமக்கும் நாம் பாக்கியம் கொண்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.