ஆளே மாறிப்போன நடிகை காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படம்
பிரபல நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.
தமிழ் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்த காஜல் 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் ஆன பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்திலிருந்தும் விலகினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்ப்பமான பிறகு அவர் வெளியிட்ட முதல் புகைப்படம் இது என்பதால் இதில் சற்றே வித்தியாசமான காஜலை காண முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.