குழந்தை பிறந்த பிறகு முதல்முறையாக போட்டோ வெளியிட்ட காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படம்

Kajal Aggarwal
By Nandhini May 02, 2022 06:18 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் அறிமுகமானார்.

இதனையடுத்து பல முன்னணி நடிகருடன் நடித்ததால் அவர் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இதனையடுத்து, கடந்த ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சில மாதங்கள் முன்பு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமாக இருப்பதுடன் வெளியானது.

அதன்பின் கடந்த சில வாரங்களாக கர்ப்பிணியான காஜல் அகர்வால் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், விளம்பரங்கள்,வளைகாப்பு, நீச்சல் உடையிலிக்கும் புகைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

காஜல் அகர்வாலுக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிச்சிலு, தன் குழந்தைக்கு நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்தனர்.

இந்நிலையில் காஜல் அகர்வாலில் தங்கை நிஷா அகர்வால், தனது இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வாலின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை நடிகை காஜல் அகர்வாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.   

குழந்தை பிறந்த பிறகு முதல்முறையாக போட்டோ வெளியிட்ட காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படம் | Kajal Agarwal Baby Is Born

குழந்தை பிறந்த பிறகு முதல்முறையாக போட்டோ வெளியிட்ட காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படம் | Kajal Agarwal Baby Is Born