நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகிய குழந்தை பிறந்தது - குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் அறிமுகமானார். இதனையடுத்து பல முன்னணி நடிகருடன் நடித்ததால் அவர் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சில மாதங்கள் முன்பு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமாக இருப்பதுடன் வெளியானது.
அதன்பின் கடந்த சில வாரங்களாக கர்ப்பிணியான காஜல் அகர்வால் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், விளம்பரங்கள்,வளைகாப்பு, நீச்சல் உடையிலிக்கும் புகைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து, நடிகை காஜல் அகர்வாலுக்கும், கவுதம் கிச்சிலுக்கும் சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர்.