கைதி இரண்டாம் பாகம் தடை விவகாரம்: விளக்கம் கொடுத்த டிரீம் வாரியர் பிக்சர்ஸ்!
மாநகரம், கைதி மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம்படத்தை இயக்கிவருகிறார்.
இந்த நிலையில் கைதி படத்தின் கதை ராஜீவ் என்னும் உண்மையானகைதியின் கதை எனசர்ச்சை வெடித்து. ராஜீவ் தயாரிப்புத் தரப்பைச் சந்தித்து கதைக்கான அட்வான்ஸ் பெற்றதாகவும் அவருக்குத் தெரியாமல் லோகேஷ் படம் எடுத்த தாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் இது தொடர்பாக கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கைதி' படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ரீமேக்குக்கு தடை வாங்கி விட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த செய்தி பரவலாக பேசப்பட்ட நிலையில் தயாரிப்புத் தரப்பான டிரீம் வாரியர்ஸ் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
#Kaithi pic.twitter.com/PvndRtmGMI
— DreamWarriorPictures (@DreamWarriorpic) July 4, 2021
அதில், எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்வெளியான கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.
மேலும் இது தொடர்பாக ஊடக நண்பர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டும் வருகின்றனர்.
எங்களுக்கு அந்த வழக்கு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிட இயலாது.
அதே சமயம் 'கைதி' சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்
. மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!" என தெரிவித்துள்ளனர்.