கைலாசா நாடு என்று ஒன்று இல்லவே இல்லயாம்: சிக்கினார் நித்தியானந்தா
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா அவர் வெளியிட ஒரு வீடியோ மூலம் அவர் வசிக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தா அவர்கள் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாகவும் அதற்கான தனியாக பணம் உள்ளிட்ட தனிசேவைகளும் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கைலாசா நாட்டிற்கு வர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு ஒரு வார கால விசா மட்டும் எடுத்தால் போதும், அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் இலவசமாக கருடா விமானத்தின் மூலம் கைலாசா அழைத்து செல்ல படுவார்கள் என தெரிவித்திருந்தார். இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த வீடியோவை ஆராய்ந்ததில் நித்தியானந்தா வணுவாட்டி எனும் தீவில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தீவு ஆஸ்திரேலியாவில் இருந்து 750 கிமீ, அமெரிக்காவில் இருந்து 540 கிமீ தூரம் கொண்டது.
எந்த நாட்டில் இருந்தும் இங்க பணம் போடமுடியும். அந்த வணுவாட்டி தீவை தான் கைலாசா என்று கூறி வந்துள்ளார் நித்தியானந்தா.