நித்தியானந்தா துன்புறுத்தப்படுகிறார் - ஐ.நாவில் கைலாசா பெண் பிரதிநிதி பரபரப்பு பேச்சு

United Nations Nithyananda
By Sumathi Mar 01, 2023 08:27 AM GMT
Report

ஐ.நா கூட்டத்தில், கைலாசா பிரதிநிதிகள் என பெண்கள் பலர் கலந்துகொண்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கைலாசா

ஐ.நா-வில் நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுவின் கூட்டத்தில், `United States of Kailasa'-வின் பிரதிநிதிகள் எனப் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

நித்தியானந்தா துன்புறுத்தப்படுகிறார் - ஐ.நாவில் கைலாசா பெண் பிரதிநிதி பரபரப்பு பேச்சு | Kailasa Attends Un Meet Claims Nithyananda

ஆனால், ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளில் கைலாசா இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில், கைலாசாவின் பிரதிநிதி எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய விஜயப்ரியா நித்யானந்தா,

ஐநா கூட்டம்

``இந்து மதத்தின் முதல் இறையாண்மை கொண்ட நாடு கைலாசா. இதை நிறுவியவர், இந்து மதத்தின் உயரிய தலைவர் நித்யானந்த பரமசிவம். இந்து மதத்தின் பூர்வீக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பிப்பதற்காக, இந்து மதத்தின் உயரிய தலைவர் நித்யானந்தா மிகக் கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்.

மேலும் இவர், தான் பிறந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார். எனவே, நித்யானந்தா உட்பட கைலாசாவிலுள்ள இரண்டு மில்லியன் இந்து புலம்பெயர் மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், 150 நாடுகளில் கைலாசா தன்னுடைய தூதரகங்களை நிறுவியிருப்பதாகவும் கூறியுள்ளார்.