காடுவெட்டி குரு மகன் கனலரசன் திடீர் கைது!
அரியலூர் அருகே கொடி ஏற்றச் சென்ற காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கரடிகுளம் கிராமத்தில் மாவீரன் மஞ்சள் படை கொடியை ஏற்ற அந்த அமைப்பின் தலைவரும் மறைந்த காடுவெட்டி குருவின் மகனுமான கனலரசன் தன் ஆதரவாளர்களுடன் நேற்று சென்றிருந்தார்.
அப்போது சட்டம் - ஒழுங்கு பாதிக்கக்கூடும் என போலீசார் அவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தனர். போலீசாரை மீறி கொடி ஏற்ற கனலரசன் வந்தார். அப்போது கனலரசன் உட்பட 36 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்தவர்களை போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனையடுத்து, வீரன் மஞ்சள் படை அமைப்பினர் கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர் திருமாவளவன் தலைமையில் பலர் ஜெயங்கொண்டத்தில் மறியலில் ஈடுபட்டார்கள். அப்போது தடையை மீறி கூறி திருமாவளவன் உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.