ராமதாஸ் எங்களை கொடுமைப்படுத்துகிறார்- காடுவெட்டி குரு தங்கை பரபரப்பு பேட்டி
பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் எங்கள் குடும்பத்திற்கு பல்வேறு பிரச்சினைகளையும், சித்ரவதைகளையும் செய்து கொண்டு வருகிறார் என்றும், அதற்கு முதல்வர் எடப்பாடி துணை நிற்கிறார் என்றும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவின் தங்கை குற்றம் சாட்டி இருக்கிறார். காடுவெட்டி ஜெ குருவின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் கனல் அரசு ‘மாவீரன் மஞ்சள் படை’ என்ற அமைப்பை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்.
அண்மையில்கூட காவல்துறையிடம் உரிய முன் அனுமதி இல்லாமல் ஜெயங்கொண்டம் பகுதியில் கொடியேற்ற வந்த கனல் அரசு மற்றும் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவரின் கைதுக்கு காடுவெட்டி குருவின் தங்கையும், கனலரசனின் அத்தையுமான மீனாட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து காடுவெட்டி குருவின் தங்கை பேசுகையில், "திமுக தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக அரியலூர் வந்தார். அவரை கனலரசன் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் ஸ்டாலினை கனலரசன் சந்திக்கக் கூடாது என கனலரசனை முன் கூட்டியே கைது செய்து விட்டார்கள். வன்னியர் குடும்பத்தை ராமதாஸ் சித்ரவதை செய்து வருகிறார். அதற்கு எடப்பாடி துணை போகிறார் என்றார்.