என்ன மாதிரியே நடிப்பியாடா நீ? பிரபல நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு - வெறிச்செயல்!

Tamil Cinema Vadivelu Actors Tamil Actors
By Jiyath Aug 01, 2023 10:31 AM GMT
Report

நடிகர் வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் என்று காதல் சுகுமார் பேட்டியளித்துள்ளார்.

காதல் சுகுமார்

1997ம் ஆண்டு வெளிவந்த சக்தி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 'காதல்' என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து புகழ் பெற்றார். கலகலப்பு, வசூல் ராஜா எம்பிபிஎஸ், அரை என் 305ல் கடவுள், தென்மேற்கு பருவக் காற்று போன்ற திரைப்படங்களும் நடித்துள்ளார். இவர் திருட்டு விசிடி என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு தன்னை ஆள் வைத்து அடித்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

வடிவேலு ஆள் வைத்து அடித்தார்

அதில் "கலகலப்பு படத்தில் நடிக்கும்போது வடிவேல் மாதிரியே நடிங்கனு சொன்னாங்க. நான் இல்ல சார் வடிவேல் மாதிரி நடிக்கதான் அவரு இருக்காரேன்னு சொன்னேன். பின்னர் பேசி ஒருவழியாக நானும் பொன்னம்பலமும் வில்லன் மாதிரி ஒரு கேரக்டரில் நடித்தோம். அதுல கிட்டத்தட்ட வடிவேலு மாதிரியே நடிச்சேன். அந்த டைம்ல வடிவேலு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டலில் இருந்தார்.

என்ன மாதிரியே நடிப்பியாடா நீ? பிரபல நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு - வெறிச்செயல்! | Kadhal Sukumar Shares Incident About Vadivelu I

அப்போது அவர் என்னை பார்க்க ஆசைப்படுவதாக கூறினார்கள். ஆஹா நம்ம குருவே நம்மள பாக்கணும்னு கூப்பிடுகிறார் என்று பூங்கொத்து வாங்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்கே போய் வடிவேலுவைப் பார்த்து "அண்ணே நீங்கதான் என் குரு என்று சொன்னேனே. உடனே அவரும் ஆமாம்யா உன்னைய பார்த்ததும் என் வயித்துல பிறந்த மாதிரியே இருக்குன்னு என் ஆத்தா சொல்லும்யா என்று வடிவேலு சொன்னார். பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கிருந்த போண்டா மணியும் முத்துக்காளையும் வெளியே அனுப்பீட்டாங்க.

என்ன மாதிரியே நடிப்பியாடா நீ? பிரபல நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு - வெறிச்செயல்! | Kadhal Sukumar Shares Incident About Vadivelu I

சரி நம்மளும் போகலாம்னு பாத்தா இருங்க தம்பி பேசலாம் என்று வடிவேலு சொன்னார். பின்னர் வடிவேலு பேசும்போது "ஏன் தம்பி ஒவ்வொரு கம்பெனியா போய் என்ன மாதிரியே நடிப்பேன்னு சொல்றியாமே? என்று கேட்டார். நான் அன்னே உங்கள மாதிரி நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும், சினிமாவில் அப்படி பண்ணமாட்டேன்னு சொன்னேன். உங்கள மாதிரி நடிச்சுதான் என் தங்கச்சிய படிக்க வச்சேன் என்று சொல்லிக்கிட்டே இருக்கும்போது என்னடா எதுத்து பேசுறனு சொல்லி பின்னாடி இருந்து ஒருத்தர் அடிச்சாரு.

அப்போது கீழே விழுந்துட்டேன். அப்பறம் கொஞ்சம் அடி விழுந்தது. ஆஹா நம்மள ஏதோ பண்ண பாக்குறாய்ங்கனு தோணுச்சு. உடனே அண்ணே இனிமே எதுவும் பண்ண மாட்டேன். ஊரை விட்டே ஓடிடுறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என தன வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் இது என்று காதல் சுகுமார் பேட்டியளித்துள்ளார்.