அவன் சைக்கோ; வெறி, 3 வருஷமா வச்சு செஞ்சுட்டான் - காதல் சுகுமார் 2வது மனைவி கதறல்!
காதல் சுகுமார் 2வது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காதல் சுகுமார்
காமெடி நடிகர் சுகுமார் காதல் திரைப்படம் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது 2வது மனைவி அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
வழக்கம் போல வீட்ல இருந்து வெளிய போனவரு ஆளையே காணோம். சோசியல் மீடியா எல்லாத்துலயும் என்ன பிளாக் பண்ணிட்டான். ரொம்ப நாள் ஆகியும் வரலையேன்னு சினிமால இருக்க அவரோட பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேட்டு முதல் வைஃப் வீட்டுக்கு போனேன்.
அங்கப் போனா, வீட்ல இருக்க எல்லாரும் என்ன ரொம்ப கேவலமா பேசி அடிக்க வர்றாங்க. நான் அவர மயக்கி வச்சிருக்கேன்னு சொல்லி அடிக்க வர்றாங்க. பொன்னாட்டி, புள்ள, மச்சான், மாமியார்ன்னு எல்லாரும் ஒரே வீட்டுல வாழ்ந்துட்டு இருக்காங்க.
மனைவி குற்றச்சாட்டு
அப்புறம் என் கூட வந்த டைரக்டர் கிட்ட தான் அவரோட பொன்டாட்டி செத்துருவேன்னு சொன்னதால கூட சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டேன்னு சொன்னாரு. அவரோட முதல் மனைவி பத்தி பேசினாலே அடிப்பாரு. அவன் இஸ்டப்பட்டு தான் நான் கூட இருக்கோம்.
ஆனா இப்படி எல்லாம் இருப்பாங்கன்னு தெரிஞ்சு யாரும் இருக்குறது இல்ல தான. என் கூட இருக்கும் போது எல்லாம் சும்மாவே இருக்க மாட்டாரு. கடிப்பாரு எல்லாம் பண்ணுவாரு. என்னன்னு கேட்டா உன் மேல அவ்ளோ வெறின்னு சொல்லுவாரு. என்னோட அழகு, தேவதை பொக்கிஷம்ன்னு எல்லாம் பேசுவாரு.
உண்மையிலேயே பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் மட்டும் தான் என் கூட இருந்தாரு. போலிஸ்காரங்க கூட, வெளிய போனா ஒருத்திக்கு ஆயிரக்கணக்குல செலவு பண்ணணும்ங்குறதால ஃபிரியா கிடைச்ச இவள வச்சி செஞ்சிருக்கியான்னு கேட்டாங்க" என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.