நடிகர் ‘காதல்’சுகுமாருக்கு கொலைமிரட்டல் விடுத்த ஜி.பி.முத்து!! கைதாகிறாரா ஜி.பி.முத்து?
சமூக வலைத்தளங்களில் ரவுடி பேபி சூர்யா, இலக்கியா, ஜி.பி.முத்து போன்றவர்கள் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கினால் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்கள் ஆன்லைன் வழியாகவே கல்வி பயில்வதால் மாணவர்கள் எப்போதும் இணையதளங்களில் மூழ்கி இருக்கின்றனர்.
அவர்களின் பார்வைக்கு இந்த ஆபாச வீடியோக்கள் வந்துவிடுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வி சீரழிகிறது என்று பலரும் ரவுடி பேபி சூர்யா, ஜி. பி. முத்து, இலக்கிய உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையே காதல் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் ’காதல்’ சுகுமாரும் ஊடகங்களில் சொல்லி வந்தார். மேலும் காதல் சுகுமாரின் நண்பரும் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுச் செயலாளருமான ஏழுமலை, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்து ஊடகங்களிலும் தெரிவித்திருக்கிறார் காதல் சுகுமார். ஊடகங்களில் காதல் சுகுமார் சொல்லியது தொடர்பாக நெல்லை சங்கர், சேலம் மணி, ஜி. பி. முத்து ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாக காதல் சுகுமாருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார்கள். இதையடுத்து நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் காதல் சுகுமார்.
அந்த புகாரில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜி.பி. முத்து, சேலம் மணி, நெல்லை சங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆபாசங்கள் நிறைந்து இவர்களின் சமூக வலைதள பக்கங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.