காதல் திருமணம் செய்த பிரபல காமெடி நடிகர் - இவரை நியாபகம் இருக்கிறதா?

Love marriage Kadhal Kadhal Arunkumar
By Petchi Avudaiappan Sep 02, 2021 01:15 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in வதந்திகள்
Report

காதல் படத்தில் நடித்த அருண்குமார் தனது காதலியை திருமணம் செய்துள்ளார்.அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் 'காதல்' கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது. பரத், சந்தியா நடித்த இப்படத்தில் பரத்தின் உதவியாளர் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அருண்குமார் நடித்திருந்தார்.

இவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக அவர் வாங்கி வரும் டீயில் எச்சிலை துப்பி கொடுப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களால் மறக்க முடியாத வகையில் அமைந்தது.

அதன்பின் விஜய்யின் 'சிவகாசி' உள்ளிட்ட சில படங்களிலும் அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அருண்குமார் சில வருடங்களாக ஒரு பெண்ணை அருண் காதலித்து வந்துள்ளார். தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த இணையவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.