பாலியல் தொல்லை கொடுத்தாங்க; சம்பந்தப்பட்டவர் பெரிய ஹீரோ.. காதல் பட நடிகை வேதனை!

Saranya Tamil Cinema Sexual harassment Tamil Actress Actress
By Jiyath Nov 27, 2023 07:50 AM GMT
Report

தானும் நடிகை விசித்ராவைப்போல் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக நடிகை சரண்யா நேர்கானல் ஒன்றில் பேசியுள்ளார்.

பாலியல் தொல்லை 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அண்மையில் நடந்த கதை சொல்லும் டாஸ்க்கில், நடிகர் ஒருவர் தன்னை அறைக்கு அழைத்ததாகவும், படப்பிடிப்பில் சிலர் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் கூறி விசித்ரா பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைத்தார்.

பாலியல் தொல்லை கொடுத்தாங்க; சம்பந்தப்பட்டவர் பெரிய ஹீரோ.. காதல் பட நடிகை வேதனை! | Kadhal Actress Saranya About Sexual Torture Cinema

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து மற்ற சில நடிகைகளும், தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சரண்யாவும் விசித்ராவைப்போல் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக நேர்கானல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது "பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உடனடியாக சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.

11 பசங்க கூட ஒரே வாடகை வீட்டில்.. அத மட்டும்தான் பண்ணுவாங்க - BiggBoss பூர்ணிமா பகீர்!

11 பசங்க கூட ஒரே வாடகை வீட்டில்.. அத மட்டும்தான் பண்ணுவாங்க - BiggBoss பூர்ணிமா பகீர்!

நடிகை சரண்யா 

பெரிய பிரபலமாக இல்லாதபோது ஒரு நடிகை சொல்லும் எதுவும் இங்கே எடுபடாது. நடந்த அநியாயத்தைப் பற்றி வெளியே சொல்ல பெயர், புகழ், அதிகாரம் தேவைப்படுகிறது. விசித்ரா விஷயத்தில் இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் சொல்வதில் தவறு இல்லை.

பாலியல் தொல்லை கொடுத்தாங்க; சம்பந்தப்பட்டவர் பெரிய ஹீரோ.. காதல் பட நடிகை வேதனை! | Kadhal Actress Saranya About Sexual Torture Cinema

சினிமாவில் ஆணாதிக்கம் நிறைய இருக்கிறது. இங்கு பெண்களுக்கான பிரச்சினைகளை பார்க்க மாட்டார்கள். அதுவும் சம்பந்தப்பட்டவர் பெரிய ஹீரோ என்பதால் என்னவென்று கூட கேட்க மாட்டார்கள். எனக்கும் இதுபோல நிறைய பிரச்சினைகள் வந்திருக்கின்றன. இதையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கிறேன். எனது பிரச்சினையை பற்றி பேசியிருந்தால் காது கொடுத்து கூட கேட்டிருக்க மாட்டார்கள்.

நல்ல நிலைமைக்கு வந்தால் மட்டும்தான் நமது குரல் அனைவருக்கும் கேட்கும். இங்கு கலையை நேசிக்காமல், சினிமாவை போதையாக நினைப்பவர்கள் மட்டும்தான் பெண்களை மோகப்பொருளாக பார்ப்பார்கள். இதை பெண்கள் தாண்டி வருவது பெரிய கஷ்டம். சினிமாவில் சொல்லப்படாத கதை இன்னும் ஆயிரம் இருக்கிறது'' என்று சரண்யா பேசியுள்ளார்.