‘‘என்னைக் கொல்ல அமமுக முயற்சி செய்கிறது’’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு புகார்
தேர்தல் தோல்விக்கு பயந்து தன்னைக் கொல்ல முயற்சி செய்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டியுள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்துள்ள பேட்டியில் நேற்று அதிமுக அமமுக இரு கட்சிகளின் பிரச்சாரமும் ஒரே இடத்தில் நடைபெற இருந்தது. அகாவே , நான் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு வாகனத்தில் புறப்பட்டேன்.
அப்போது எனது காரை வழி மறித்த அமமுகவினர் அங்கு வைத்திருந்த பட்டாசுகளை எடுத்து என் கார் மீது வீசினர். வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் என்மீதும் , கார் டிரைவர் மீதும் தீப்பொறிப்பட்டு காயம் ஏற்பட்டது. கார் டிரைவர் லாவகமாக காரை ஓட்டவில்லை என்றால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என கூறிய அமைச்சர்.
நான் எளிதில் வெற்றி பெறுவேன் என (அமமுக) அவர்களுக்கு தெரிந்துவிட்டது. ஆகவே என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள்.தோல்வி பயத்தால் இப்படிப்பட்ட செயல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இறங்கியுள்ளனர் எதையும் சந்திக்க தயார் என கூறியுள்ளார்.