எனக்கு மலேசியா சிங்கப்பூரில் பெட்டிக்கடை கூட இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்க்கொண்டார். அப்போது பிரசார கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,எனக்கு சிங்கப்பூர் மலேசியாவில் ஹோட்டல்கள் உள்ளதாக அமமுக தென் மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா கூறி வருகிறார்.
இது முற்றிலும் தவறான தகவல். இதனால் தனது மாணிக்கராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என கூறிய அமைச்சர். சிங்கப்பூருக்கு இதுவரை நான் போனதே இல்லை ;மலேசியாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன்.
மலேசியா, சிங்கப்பூரில் இரண்டு நாடுகளிலும் எனக்கு ஒரு பெட்டிக்கடை கூட இல்லை. அப்படி இருப்பதாக நிரூபித்தால் நான் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக உள்ளேன் என கூறினார்.