டிடிவி தினகரன் ஆர் கே நகரில் இருந்து ஓடி வந்தது ஏன் ? அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

dhinakaran Kadambur Raju rk nagar
By Jon Mar 16, 2021 01:34 PM GMT
Report

டிடிவி தினகரன் ஆர் கே நகரில் இருந்து ஓடி வந்தது ஏன்? என அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். டிடிவி தினகரனுக்கு டெபாசிட் கிடைக்காது என்றும். ஆர் கே நகரில் இருந்து அவர் ஓடி வந்தது ஏன்? இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தெரிவித்துள்ளார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் செ ராஜு கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பகுதியில் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மக்கள் சக்தி படைத்த தலைவராக மறைந்த முன்னாள் ஜெயலலிதா இருந்தார் ஆகையால் அவர் தேர்தலின் போது ஹெலிகாப்டர் மூலமாக ஆங்காங்கே வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆனால் மு.க.ஸ்டாலின் ஹெலிகாப்டர் இல்லை , ராக்கெட் ஏவுதளத்தில் வந்தால் கூட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நேரத்தில் கடன் வாங்கி தொழில் அபிவிருத்தி செய்து மக்களுக்கு வேண்டிய திட்டங்களை வழங்கி அதன்பின்னர் பொருளாதாரத்தை ஈட்டி கடனை அடைக்க வேண்டிய நிலையில்தான் உலக பொருளாதார நிலை உள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் கடன் இல்லை என்பதை கனிமொழி எம்பி பட்டியலிட முடியுமா? அரசியலுக்காக சொல்லி வருகிறார்.தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக வரியில்லாத பட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கிய போதிலும் கடன் சுமையை மக்கள் மீது திணிக்க வில்லை, அரசே ஏற்றுக்கொள்கிறது.மக்கள் மீது சுமை இல்லாத ஆட்சி நடத்திய காரணத்தினால்தான் இரண்டாவது முறை ஆட்சி செய்ய அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர்.

தற்போது மூன்றாவது முறையாகவும் தொடர் வெற்றி பெறக்கூடிய ஆட்சியாக உள்ளது. 2016 தேர்தல்களின் போது தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே அமைச்சரவை ஒத்திகை பார்த்தவர்கள் திமுகவினர்.பதவி ஆசை இருக்கலாம் பதவி வெறி இருக்கக் கூடாது.பல கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து திமுக கடந்த தேர்தலை சந்தித்தது. ஆனால் அதிமுக கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சட்டமன்றத்தில் திமுகவினர் செய்த ரகளை தொடர்பான வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும்.

அதை மக்கள் பார்க்கும்போதுதான் திமுகவிற்கு பதவி வெறி எப்படி உள்ளது என்பது தெரியும்.அதிமுக 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறும்.2011 ல் அதிமுக தொண்டனாக சட்டமன்ற தேர்தலை சந்தித்தேன், 2016 சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றி இரண்டாவது முறை தேர்தலை சந்தித்தேன். தற்போது மூன்றாவது முறையாக அமைச்சராக இருந்து பணியாற்றி துணிச்சலுடன் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

கோவில்பட்டி தொகுதியிலிருந்து நான் வேறு தொகுதிக்கு செல்வதாக வந்த ஒரு செய்தியை தொடர்ந்து பொதுமக்கள் தொடர்புகொண்டு இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் பொதுமக்கள் என்று வலியுறுத்தினர். 3வது முறையாக தொடர்ந்து தெம்போடு திராணியோடு, மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையுடன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று மூன்று ஆண்டுகளில் ஓடி வரவேண்டிய நிலை என்ன என்பதை பற்றி டிடிவி தினகரன் தான் பதில் சொல்ல வேண்டும். சட்டமன்றத்திற்கு டிடிவி தினகரன் வந்ததில்லை பின்னர் எப்படி தொகுதி பக்கம் சென்று இருப்பார்.டிடிவி தினகரன் வெற்றி பெற்ற பின்னர் மூன்று முறை தான் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறார்.ஆர்.கே. நகர் பக்கம் டிடிவி தினகரன் திரும்பி போக முடியாது காரணம் 20 ரூபாய் நோட்டு.

இருபது ரூபாய் நோட்டை கையில் வைத்துக்கொண்டு ஆர்.கே. நகர் மக்கள் இன்றும் தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அமைச்சர்கள், எம்பி. எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனுக்கு காத்து நிற்க வேண்டிய நிலை இருந்தது.அமைச்சர்கள் எம்எல்ஏ எம்பிக்களுக்கு இந்த நிலை என்றால் கோவில்பட்டி மக்கள் இது நினைத்துப் பார்த்தால் டிடிவி தினகரன் டெபாசிட் கிடைக்காது.

பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறை வெற்றிபெற்ற பின்னர் இரண்டாவது முறை ஏன் தோற்றார். ஆர் கே நகரில் வெற்றி பெற்ற பின்னர் தற்போது ஏன் செல்லவில்லை என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.அமைச்சர் பேசியதற்காக தான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வந்திருப்பதாக டிடிவி தினகரன் கூறியதாக தெரிகிறது.

அப்படியிருந்தால் என்னுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வந்ததற்கு டிடிவி தினகரனுக்கு நன்றி. தொகுதி மக்களின் நம்பிக்கை வைத்து மு க ஸ்டாலின் கூட சவால் விட்டிருக்கிறேன். ஸ்டாலின் வந்தாலும் இதுதான் நிலைமை.தொகுதி மக்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.மக்களை நம்பி நான் தேர்தல் நிற்கிறேன். அவரை போன்று ராஜா மன்னரை நம்பி இல்லை.நான் வெற்றி பெற்றால் இவர்தான் சட்டமன்ற உறுப்பினர் என்று டிடிவி தினகரன் கூறுகிறார்.சட்டமன்ற உறுப்பினருக்கு டெப்டேஷனா போட முடியும் என்று சொன்ன ஒரே நபர் இந்தியாவில் டிடிவி தினகரன் மட்டும்தான் என்றார்