வீட்டிற்கு சீக்கிரம் வந்த கணவர்! காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்! என்ன நடந்தது?
கடலூர் அருகே காதலுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் மீனாட்சி பேட்டை கிராமத்தை சேர்ந்த முருகன் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் இவரது மனைவி வனஜா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
வனஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமாருக்கும், கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் தான் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கணவன் வேலைக்கு சென்றவுடன், கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதனை கண்டறிந்த அக்கம்பக்கத்தினர் கணவர் முருகனிடன் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவர் முருகன், வனஜாவை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதில் வனஜா இனிமேல் கிருஷ்ணகுமாருடன் பழகமாட்டேன் என கூறி மன்னிப்பும் கேட்டுள்ளார். இதனை நம்பிய கணவன் வழக்கம்போல் மனைவியை விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
சம்பவத்தன்று, வேலை முடிந்து சீக்கிரம் வீடு திரும்பியுள்ளார். அப்போது கிருஷ்ணக்குமாரும், வனஜாவும் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுக்கு மேலும் சும்மா விடமாட்டேன் என்று ஊரை கூட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வனஜா கணவனின் கழுத்தை நெறித்துகொலை செய்துள்ளார். இதில் மூச்சுத்திணறி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் முருகனின் வாயில் மதுவும், விஷத்தை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகவும் நாடகமாடியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளாத
மனைவி, பிறகு தான் கணவர் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.