கள்ளக்காதலை கண்டித்த கணவர் அடித்துக்கொலை! கள்ளக்காதலுருடன் மனைவி கைது!!
கடலூர் அருகே இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்த கணவரை அடித்துக்கொன்று விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அடுத்துள்ள மீனாட்சிபேட்டை கிராமத்தை சேர்ந்த முருகன், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும், இவரது அக்கா மகள் வனஜாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வனஜா வேறுஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றனர்.
இதனை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விசாரணையில் வனஜாவுக்கு அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணக்குமார் என்பவரும் கள்ளக்காதல் தொடர்ந்து வருகிறது என்றும், சம்பவத்தன்று இருவரும் தனிமையில் இருந்ததை கணவர் பார்த்ததால் வனஜா மற்றும் கிருஷ்ணக்குமார் ஒன்றாக இணைந்து முருகனை அடித்து கொலை செய்து நாடகாமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து
அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.