மனைவி தூங்கியதும் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுக்கும் கணவன் - நண்பர்களுக்கு போட்டுக்காட்டும் கொடுமை
சென்னையில் காதலித்து திருமணம் செய்த மனைவியை, தூங்கும் போது நிர்வாணமாக படமெடுத்து அதை நண்பர்களிடம் போட்டுக்காட்டும் கொடூர கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் வேலை தேடி சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அங்கு அவரது திறமையின் மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறுவர், சிறுமியருக்கு நடன பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் அபாய வளைவு, வழித்துணை காதலி ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சிங்கப்பூரில் ஆட்டோமொபைல் பொறியாளராக பணியாற்றி வந்த அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இருவரும் அருண் வீட்டாரின் சம்மதத்துடன் கடலூரில் திருமணம் செய்து கொண்டனர். நாட்கள் செல்ல ஐஸ்வர்யாவுக்கும், அருண் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடுப்பான அருண், மனைவியை அழைத்து கொண்டு சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துளார்.
ஆனாலும் அவர்கள் விடாமல் போனில் தொடர்பு கொண்டு ஐஸ்வர்யாவை கொடுமை செய்து வந்துள்ளனர். இந்த பிரச்சினை பெருசாக கிளம்ப, ஒரு நாள் அருணும் அவரது தாயார் பேச்சை கேட்டு ஐஸ்வர்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் சில வீடியோக்களையும் காட்டி மிரட்டியுள்ளார். அதில் ஐஸ்வர்யா நிர்வாணமாக படுத்து கிடந்துள்ளார். திருமணம் ஆன நாள் முதல் அருண், தன் காதல் மனைவிக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அவர் மயங்கியவுடன் அவரை நிர்வாணப்படுத்தி பல புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, கடலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.