“கச்சா பதாம்” பாடகர் சாலை விபத்தில் காயம் - மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள குரல்ஜுரி கிராமதத்தை சேர்ந்தவர் பத்யாகர்.
இவர் தனது அருகில் உள்ள கிராமங்களில் வேர்க்கடலை விற்பனை செய்து வந்தார். அவர் தான் வேர்க்கடலை விற்பனை செய்ய செல்லும் இடங்களில் பாட்டு பாடி விற்பனை செய்து வந்துள்ளார்.
விற்பனை செய்யும் போது தனது பாடலான கச்சா பதாம் வைரலாக தொடங்கியது. இதையடுத்து பத்யாகர் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தார்.

இந்நிலையில் திரைப்படம் மற்றும் ஆல்பம் பாடல்களில் பாட்டு பாட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
இந்நிலையில் பத்யாகர் கடந்த திங்கட்கிழமை தனது புதிய காரை ஓட்ட முயன்ற போது விபத்துக்குள்ளானார். அப்போது காயம் அடைந்த பத்யாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.